15 Nov 2011

லெப்.கேணல்-பொன்னம்மான்


இயற் பெயர் - யோகரத்தினம் குகன்
இயக்கப் பெயர் - பொன்னம்மான்/அம்மான்
தாய் மடியில் - 25.12.1956
தாயக மடியில் - 14.02.1987

தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா.... 

மேஐர்.கேடில்ஸ்


இயற் பெயர் - மகாலிங்கம் திலீபன்
இயக்கப் பெயர் - கேடில்ஸ்
தாய் மடியில் - 14.05.1966
தாயக மடியில் - 14.02.1987

போராட்டத்தின் நிழலில் பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார்.

கப்டன்.மொரீஸ்




இயற் பெயர் - பரதராஜன் தியாகராஜா
இயக்க பெயர் - மொறிஸ்
தாய் மடியில் - 12.09.1969
தாயக மடியில் - 01.05.1989


நான் போர்முனையில்
குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!
கப்டன் - மொறிஸ்.

மேஜர் பசிலன்


                                                                
                                                      இயற்பெயர் - நல்லையா அமிர்தலிங்கம்
                                                     இயக்கப்பெயர் - பசிலன்
                                                     தாயின் மடியில் - 
                                                     தாயக மடியில் -  11-8-1987


பசீலன் 2000 என்று பசிலனின் பேர் சொல்லும் போராட்ட களங்கள் கதைகளை தாண்டியும் நிஐங்களாய் எம்முன்னே நீண்டிருக்க அவனது நினைவுகளை நாம் மறக்கத்தான் முடியுமா !!

வீரவேங்கை.பகீன்


இயற்பெயர் - அன்னலிங்கம் பகீரதன்
இயக்கப் பெயர் - பகீன்
தாய் மடியில் - 02.05.1959
தாயக மடியில் - 18.05.1984

விடுதலைப் புலிகளின் கொள்கையின் படிஎதிரியிடம் உயிருடன் பிடிபட்டு விடக்கூடாது என்று நஞ்சருந்தி (சையணைட்) வீரச்சாவெய்திய முதல் விடுதலைபுலிப் போராளி இவன்.

10 Nov 2011

கரும்புலி.மேஐர்.அன்புக்குமரன்


ஆண்குரல்:- “அம்மா.... எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக.... என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ.... அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா..... உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்....”
கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை... தன்தாயை நேசித்தது போலவே... தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்.....

8 Nov 2011

மேஐர்.மேதவன்

நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான். 


மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம் தாயக விடுதலையில்தான் என ஆழமாக நம்பியவன். எல்லோரையும் வியப்பூட்டும்படியாக மாதவனுடைய செயற்பாடுகள் இருந்தன. அன்பில் விளைந்த மனம் இவனுடையது.